பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவருடைய வீட்டில் இருந்து எவ்வித தற்கொலை கடிதமும் சிக்காதது ரசிகர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தேகத்தை ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: கமல், விஜய், சூர்யா, சிம்பு குடும்பத்தை பற்றி மீரா மிதுன் கண்டுபிடித்த ரகசியம்... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

சுஷாந்த் தற்கொலை விவகாரம் தொடர்பாக, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி, முன்னாள் பிசினஸ் மேனேஜர், மகேஷ் ஷெட்டி, சஞ்சனா சங்கி, தயாரிப்பாளர் முகேஷ் சாப்ரா, பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மா, உறவினர்கள், உடன் தங்கியிருந்தவர்கள் என இதுவரை 41 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். 

 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி சுஷாந்தின் மன அழுத்த பிரச்சனையை வெளியில் சொல்லிவிடுவேன் எனக்கூறி அவரை மிரட்டியதாகவும், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வைத்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் தான் ஓராண்டுகளாக லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும், கடந்த மாதம் ஜூன் 8ம் தேதி வரை ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனக்கும் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், ரியா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் போது தன்னிடமும் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.