Asianet News Tamil

“வனிதாகிட்ட மன்னிப்பு கேட்க முடியாது”... ஒரேயடியாய் தடலாடி காட்டும் தயாரிப்பாளர்...!

இந்நிலையில் மற்றொரு பேட்டியில் பேசியுள்ள ரவீந்தர், வனிதாவிடம் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் , என் உடலைப் பற்றி பேசியதற்காக வனிதா தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

I am Definitely not ask apologies to Bigg Boss Vanitha Famous Producer Open Talk
Author
Chennai, First Published Jul 9, 2020, 5:13 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


இப்போதைக்கு சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே பிக்பாஸ் பிரபலம் வனிதா, பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்டது தான். கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தான். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலை பிரிந்து வாழ்ந்து வரும் அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போர்க்கெடி தூக்கியுள்ளார்.  பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்.  எனக்கு எனது கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம், வனிதா என் கணவரை அபகரித்துக்கொண்டார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதற்கு வனிதாவும் சலிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். 

 

இந்த பிரச்சனைக்கு நடுவே வனிதா - பீட்டர் பால் திருமணத்தின் போது வெளியிட்ட லிப் லாக் போட்டோஸ் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் வனிதா அதேபோன்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். வனிதாவின் 3வது திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி என பலரும் கருத்து தெரிவித்தனர். அப்படி தயாரிப்பாளர் ரவீந்தரும் விமர்சனங்களை முன்வைத்தார். ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்தர், வனிதா திருமணம் செய்தது தவறு இல்லை. முறையாக விவாகரத்து பெறாத நபரை திருமணம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். 

 

முதலில் அனைத்து பேட்டிகளிலும் திருமணம் எனக்கூறிவிட்டு, பிரச்சனையானதும் இல்ல இல்ல இதுவெறும் நிச்சயதார்த்தம் தான் என சொல்லிவிட்டு, லவ் ஆப் ஷேரிங் என முத்தமிட்டுக்கொண்டதை பார்த்தால் ஒரிஜினல் மனைவிக்கு எப்படி வயிறெரிச்சலாக இருக்கும் என கடும் விமர்சனங்களை முன்வைத்தார். 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

ரவீந்தரின் இந்த பேட்டியை பார்த்த வனிதா விஜயகுமார் கொந்தளித்து போயுள்ளார். என் சொந்த விஷயத்தில் தலையிட நீ யார்?. 3வது கல்யாணம் செஞ்சிக்கிறது, சோசியல் மீடியாவில் போட்டோ ஷேர் பண்றது எல்லாம் என் சொந்த விஷயம். அதில் தலையிட நீ யாரு. பீட்டர் பால் மனைவி ஹெலனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். ஏன் நீங்க எந்த தொடர்பும் இல்லாமல் இந்த விஷயத்தில் கருத்து சொல்லுறீங்க. நான் ஒரு பிரபலமான நடிகை, 40 வருஷங்களாக எல்லாருக்கும் தெரிந்த விஜயகுமார் - மஞ்சுளா மகள் அதனால் என்னை வைத்து பப்ளிசிட்டி தேடப்பாக்குறார். உங்க மூஞ்சிக்கும் உடம்புக்கு உங்களை எல்லாம் யாருக்கு தெரியும். தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார். 

 

இதையும் படிங்க: “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

இந்நிலையில் மற்றொரு பேட்டியில் பேசியுள்ள ரவீந்தர், வனிதாவிடம் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் , என் உடலைப் பற்றி பேசியதற்காக வனிதா தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் பீட்டர் பால் முதல் மனைவிக்கு ஆதரவாக தான் செயல்படுவேன். வனிதா என் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 

Follow Us:
Download App:
  • android
  • ios