கொரோனா லாக்டவுனில் வீட்டிற்குள் முடங்கியுள்ள ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி எனப்படும் ஆன்லைன் பிளாட்பார்கள் தான். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ் பிளேயர், ஜீ5 அளவில்லாத படங்களை கொண்ட ஆன்லைன் தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போதைய ஆன்லைன் யுகத்தில் இணையத்தின் பயன்படும் ஏகத்திற்கு அதிகரித்துள்ளதால், ஆன்லைனில் படம் பார்ப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்?... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...!

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்காக ஆன்லைனில் ஆபாச படம் பார்ப்பவர்களை கண்டறிந்து களையெடுக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆபாச தளங்கள் முடக்கம், செல்போன் மூலம் அந்த மாதிரியான படங்களை ஷேர் செய்தால் கைது என அதிரடி நடவடிக்கைகள் தூள் பறக்கின்றன. இது ஒருபுறம் என்றால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெப் சீரிஸ் என்ற பெயரில் கொட்டி கிடக்கும் ஆபாச படங்களை நீக்க போவது யார்  என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

உலகம் முழுவதும் ட்ரெண்டான கேம் ஆஃப் த்ரோன்ஸ் அதிக பார்வையாளர்களை பெற காரணம் அதில் இருந்த நிர்வாண காட்சிகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு வெப் சீரிஸ் வெற்றி பெற வேண்டும் என்றாலே இடையே இடையே பிட்டு சீன் போல், அந்த மாதிரி காட்சிகளை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆன்லைன் தளங்கள் மாறிவருகின்றன. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு என்று தனியாக சென்சார் போர்டு கிடையாது. அதனால் காண சகிக்காத ஆபாச காட்சிகள், கேட்க முடியாத அசிங்கமான வசனங்கள், முழு நிர்வாணத்துடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் என கண்டமேனிக்கு இருப்பது இளம் தலைமுறையினரை சீரழிப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

அனுஷ்கா சர்மா நடித்த பதால் லோக், நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரினச்சேர்க்கையாளராக நடித்த Sacred Games, சோனியா அகர்வால் நடித்துள்ள காட்மேன் என சமீபத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் அனைத்திலும் உடலுறவு மற்றும் நிர்வாண காட்சிகள் அதிகமாக இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களை கட்டுப்படுத்த தணிக்கை குழுவை நியமிக்க வலியுறுத்தி #CensorWebSeries என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதன் மூலம் மட்டுமே வெப் சீரிஸ்களில் உள்ள ஆபாசம், மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் பிரச்சனைகளை தூண்டிவிடுவது, சகிக்க முடியாத கெட்ட வார்த்தைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.