சேலை கட்டுவது என்பது ஒரு கை தேர்ந்த கலை என்றே கூறலாம். பெண்களுக்கு சாதாரண சேலைகள் கட்டுவது மிகவும் எளிமையான ஒன்று என்றாலும், பட்டு புடவை கட்டும் போது , மடிப்பு மற்றும், சரியாக கொசுவம் வைக்க தெரியாமல் திணறி விடுவார்கள்.

இந்நிலையில், எப்படி காஞ்சிபுர சேலையை அழகாக கட்டுவது என சொல்லி கொடுத்துள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.


பொதுவாக எப்போதும் எதையாவது சர்ச்சையாக பேசி பிரபலங்களை வம்புக்கு இழுப்பதும், கவர்ச்சி உடையில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை வெளியிடுவதையும் மட்டுமே பெரிய வேலையாக செய்து வந்த ஸ்ரீரெட்டி , சேலை கட்டும் வீடியோ வெளியிட்டுள்ளது, பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது மட்டும் இன்றி, பெண்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சுமார் 20 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த வீடியோவில் ... பெண்கள் பட்டு புடவை கட்டுவதற்கு முன், சேலையை எப்படி இஸ்திரி போட வேண்டும். அதனை எப்படி கொசுவம் எடுத்து பின்  செய்வது  என அழகாய் விளக்கம் கொடுத்து சேலையை கட்டி காண்பித்துள்ளார்.


ஸ்ரீரெட்டியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ: