தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. பெயருக்கு ஹீரோயினாக நடிக்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். 

இதையும் படிங்க: மோடி, ரஜினியைத் தொடர்ந்து அக்‌ஷய்குமார்...! பந்திப்பூர் காட்டில் "மேன் வெர்சஸ் வைல்டு" ஷூட்டிங்...!

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட கதையில் நடித்து வருகிறார். மனதில் பட்டதை எங்கு வேண்டுமானாலும் பேசக்கூடிய தைரியமான பெண்ணான டாப்ஸி, பாலிவுட் குயின் கரீனா கபூர் தொகுத்து வழங்கி வரும் "வாட் விமன் வாண்ட்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நடிகை முதல் மா நித்தியானந்த மாயி ஆக மாறியது வரை... ரஞ்சிதாவின் அசத்தல் புகைப்படங்கள்...!

அந்நிகழ்ச்சியில் குருநானக் ஜெயந்திக்காக குருத்வாராவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். இதற்கு முன்னதாக நான் அப்படிப்பட்ட கூட்டத்தில் சென்றதில்லை. அப்போது எனக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அவ்வளவு கூட்டத்தில் நடந்தால் ஏதாவது நடக்கும் என என் உள்ளுணர்வு சொன்னது. அதுபோலவே ஒருவன் என் பின்பக்கத்தை தொட முயன்றான். அதை பார்த்த நான்... அவன் விரலை அப்படியே பின்னால் திருப்பி மடக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.