History of the 18th-18th centuries Hero Raghava Lawrence Heros Love Agarwal ...

ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் சரித்திரப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

கடந்த சில வருடங்களாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் சரித்திரப் படங்களின் அணிவகுப்பு வரத் தொடங்கியுள்ளன. அதில் பாகுபலியும் அடங்க்கும்.

தற்போது ‘பாகுமதி’, ‘சங்கமித்ரா’ ஆகிய படங்கள் உருவாகவுள்ளன.

அடுத்ததாக ‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ என பல பிரம்மாண்ட சரித்திர படங்கள் 1000 கோடி, 500 கோடி பட்ஜெட்டுகளில் உருவாக மக்களை சேரத் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், பேய் கதைகளாக நடித்து வந்த ராகவா லாரன்சும் தற்போது ஒரு சரித்திர படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்திற்கான கதையை ‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலி தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

18-19-ஆம் நூற்றாண்டுகளில் நடக்கும் கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது.

இந்த படத்தின் நாயகியாக நடிக்க வைக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். காஜல் அகர்வால் இந்தப் படத்தில் இளவரசியாக நடிக்கிறாராம்.