இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்பட வெற்றி விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’இங்கே சாதி அரசியலை பேசி படம் எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். சமீபத்தில் ஒரு இந்தி பட நிறுவனத்துடன் சேர்ந்து படம் எடுக்க வந்தார்கள். அவர்கள் என்னைப்பற்றி இங்கே இருப்பவர்களிடம் கேட்டுள்ளார்கள். இங்கிருக்கும் நல்லவர்கள் என்னைப்பற்றி கொடுத்ததால் அவர்கள் படம் எடுக்காமல் அப்படியே ஓடி விட்டார்கள். அதற்கு பிறகு அவர்கள் வரவில்லை. காரணம் கேட்டதற்கு ’அவரைப்பற்றி நிறைய தப்பாக சொல்கிறார்கள்’எனக் கூறி விட்டனர். அதையும் மீறி சில நிறுவனங்கள் என்னை நம்பி படம் எடுக்க வருகிறார்கள். 

வரும் 18ம் தேதி அடுத்து நாங்கள் தயாரிக்க இருக்கும் படத்தை பற்றி அறிவிக்க இருக்கிறோம். அப்போது நிறைய படங்களை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.