தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பிசியாக பறந்துகொண்டிருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர். கதை நன்றாக இருந்தால் உடனே அந்த படத்தை தயாரிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் இயக்கவும் செய்கிறார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

அப்படி அவர் இயக்கிய படங்கள் தான் தோனி, உன் சமையலறையில் ஆகிய படங்கள். 2014ம் ஆண்டு தமிழில் வெளியான உன் சமையலறையில் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாது இயக்கவும் செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் சினேகா, ஊர்வசி, பூர்ணா, வித்யுலேகா ராமன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்த படம் தமிழில் ஹிட்டானதைத் தொடர்ந்து அதை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்த பிரகாஷ் ராஜ், அதை தானே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். தடிகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட அந்த படத்திற்காக இந்தி பைனான்சியர் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளார். 

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்தி திரைப்பட பைனான்ஸியர் ஒருவர் காசோலை மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் இந்தி படத்தை தயாரிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் ரூ. 5 கோடிக்கு வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாக கூறியிருந்தார். 

இதையும் படிங்க: ஓவரா சீன் போடாதீங்க கமல்... நீங்களும், ஷங்கரும் கூட விபத்துக்கு பொறுப்பு... லைகாவின் பளார் பதில்...!

இதனை விசாரித்த பெருநகர 3வது விரைவு குற்றவியல் மாஜிஸ்திரேட்டு, வருகிற ஏப்ரல் மாதம் 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.