Asianet News TamilAsianet News Tamil

வாடகை பாக்கி விவகாரம்... லதா ரஜினிகாந்திற்கு ஐகோர்ட் அதிரடி எச்சரிக்கை...!

வாதங்கை கேட்டறிந்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

High Court Warns Latha Rajinikanth For Ashram School rent case
Author
Chennai, First Published Dec 16, 2020, 11:27 AM IST

ஸ்ரீராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளரான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்தில் வாடகை பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2013ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி தொகையான ஒரு கோடியே 99 லட்சத்தை உடனடியாக செலுத்த உத்தரவிடக்கோரி ஆஸ்ரம் பள்ளி செயல்படும் இடத்தின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

High Court Warns Latha Rajinikanth For Ashram School rent case

இந்த வழக்கு நிலுவையில் இருந்த வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து வாடகை பிரச்சனை நீடித்து வந்தது. இதனிடையே  2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருதரப்பினர் இடையே பரஸ்பரம் உடன்பாடு ஏற்பட்டு,ஸ்ரீராகவேந்திரா கல்விச் சங்கம் இடத்தை காலி செய்ய ஒப்புக்கொண்டது. 

High Court Warns Latha Rajinikanth For Ashram School rent case

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்க கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

High Court Warns Latha Rajinikanth For Ashram School rent case

 

இதையும் படிங்க: ஸ்டன்னிங் லுக்கில் சமந்தா... இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்த தாறுமாறு போட்டோஸ்...!

இந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, அப்போது இடத்தை காலி செய்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவலாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

High Court Warns Latha Rajinikanth For Ashram School rent case

 

இதையும் படிங்க: பட்டு பாவாடை சட்டையில் ‘குட்டி’ நயன் அனிகா... மிடுக்கான போஸில் மிரள வைக்கும் போட்டோஸ்...!

வாதங்கை கேட்டறிந்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆஸ்ரம் பள்ளி தற்போதைய முகவரியில் 2021 - 22ம் ஆண்டிற்கான சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios