Asianet News TamilAsianet News Tamil

'லியோ' படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1246 இணையதளங்களுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தளபதி விஜய் நடித்துள்ள, 'லியோ' திரைப்படம், நாளை வெளியாக  உள்ள நிலையில், இந்த படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

High Court ordered 1246 websites banned for publishing Leo movie illegally mma
Author
First Published Oct 18, 2023, 12:25 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின், மாஸ் வெற்றிக்கு பின்னர், தளபதி விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம், 'லியோ'. தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இதுவரை... நாளைய முன்பதிவு டிக்கெட் வழங்காமல் இருப்பது, இப்படம் சொன்னது போல் நாளை வெளியாகுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இப்படத்தின்  தயாரிப்பாளர் லலித் குமார், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே நடத்திவரும் பேச்சு வார்த்தைக்கு இதுவரை உடன்படவில்லை என்றாலும், 'லியோ' படத்தை 4 மணிக்கு திரையிடவும், 7 மணிக்கு தமிழகத்தில் திரையிடவும் நீதிமன்றம் வரை சென்று முட்டி போதி பார்த்தார். ஆனால் தமிழக அரசு, ஏற்கனவே கைவிரித்த நிலையில்... நீதிமன்றமும் 4 மணி காட்சிக்கு தடை விதித்தது மட்டும் இன்றி, 7 மணி காட்சி குறித்து தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் உடன்பட வேண்டும் என அறிவித்தது. மேலும் இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

High Court ordered 1246 websites banned for publishing Leo movie illegally mma

திரையரங்கு உரிமையாளர்களும், 'லியோ' பட தயாரிப்பாளர் ஆசையில் மண்ணை போடும் விதத்தில், காலை 9 மணியில் இருந்து 5 காட்சிகள் திரையிடுவது போதுமானது என பதில் மனுவில் கூறியதால். தற்போது, தமிழகத்தில் 9 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவது உறுதியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் செய்த துரோகம் இது தான்! டி.இமான் குற்றச்சாட்டு குறித்து பேசிய முதல் மனைவி மோனிகா!

இதை தொடர்ந்து 'லியோ'  திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என, தயாரிப்பாளர் லலித் குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்த செய்தார். மனுதாரர் தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதிட்டார்.

High Court ordered 1246 websites banned for publishing Leo movie illegally mma

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? கால் பந்தில் கலக்கும் குட்டி தல! கழுத்தில் பதக்கத்துடன் கெத்தாக நிற்கும் ஆத்விக்

பின்னர் இந்த மனுவை மீதான விசாரணையை கேட்டபின்னர் நீதிபதி அப்துல் குத்தூஸ், 1246 இணையதளங்களில் 'லியோ' படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios