மஞ்சுமெல் பாய்ஸ் எனும் மாஸ்டர் பீஸ் படத்தை இயக்கியவர்... யார் இந்த சிதம்பரம்; அவர் இயக்கிய படங்கள் என்னென்ன?

மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரம் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்களை பார்க்கலாம்.

here the interesting facts about manjummel boys movie director chidambaram gan

கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது மஞ்சுமெல் பாய்ஸ் தான். இது மலையாள படமாக இருந்தாலும் இதற்கு தமிழ்நாட்டில் வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் அப்படத்திற்கும் கமல்ஹாசனின் குணா படத்திற்கும் உள்ள கனெக்‌ஷன் தான். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்த குணா திரைப்படம் அந்த சமயத்தில் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், காலம் கடந்து கொண்டாடப்படும் படங்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. அதற்கு காரணம் அதன் மேக்கிங், கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை தான்.

சந்தான பாரதி இயக்கிய அப்படத்தை கொடைக்கானலில் உள்ள ஒரு குகையில் படமாக்கி இருந்தனர். இப்படக்குழு கண்டுபிடித்து படமாக்கிய அந்த குகை தான் பின்னர் குணா குகை என பெயரிடப்பட்டு டூரிஸ்ட் ஸ்பாட் ஆகவும் மாறியது. அந்த குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கி இருக்கிறார் சிதம்பரம்.

கேரளாவில் உள்ள மஞ்சுமெல் என்கிற பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது குணா குகையில் ஒருவர் மட்டும் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இந்த சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது. அதை மையமாக வைத்து தான் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்கி உள்ளார் சிதம்பரம்.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் தற்போது குணா திரைப்படத்திற்கும், அதில் இடம்பெற்ற கண்மனி அன்போடு காதலன் பாடலுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்க தொடங்கி உள்ளது. இதுவரை காதலர்களின் கீதமாக கொண்டாடப்பட்ட கண்மனி அன்போடு காதலன் பாடல் தற்போது நட்பின் இலக்கணமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அப்பாடலை அப்படத்தில் பயன்படுத்திய விதம் தான்.

இதையும் படியுங்கள்... திரையரங்குகளை கலக்கும் Manjummel Boys.. நேரில் அழைத்து வாழ்த்தும் கோலிவுட் ஜாம்பவான்கள் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

here the interesting facts about manjummel boys movie director chidambaram gan

கிளைமாக்ஸில் குகையில் சிக்கிய நண்பனை சக நண்பர்கள் மீட்கும் போது, ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற பாடல் வரிகள் பின்னணியில் ஒலிப்பதை கேட்கும் போது அனைவரையும் புல்லரிக்க வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த சூழலில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது அப்பாடல்.

குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதியே தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்த போது தன்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தியதாக கூறி இருந்தார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனும் இப்படத்தை பார்த்து மெர்சலாகிப் போய் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். அதுமட்டுமின்றி தனுஷ், விக்ரம், உதயநிதி ஸ்டாலின் என தமிழ் திரையுலகமே மஞ்சுமெல் பாய்ஸை கொண்டாடி வருகின்றனர்.

இப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த இயக்குனர் சிதம்பரம் யார் என்று தெரியுமா, அவரும் ஒரு தீவிர கமல் ரசிகனாம். கமல்ஹாசனின் குணா திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் எடுக்க தனக்கு ஊந்துகோளாக இருந்தது என அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் Jan.E.Man என்கிற மலையாள படத்தை இயக்கி உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் தான் அவரின் அறிமுகப்படமாகும்.

Jan.E.Man திரைப்படமும் மலையாளத்தில் மாஸ் ஹிட் அடித்தது. அதன் பின்னர் 3 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கிய திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். அப்படத்திற்காக கேரளாவிலேயே குணா குகையை தத்ரூபமாக செட் அமைத்து படமாக்கி இருக்கிறார் சிதம்பரம். இப்படம் கமல் ஹாசனுக்கு ஒரு சமர்ப்பணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து செதுக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் சிதம்பரம். கமல்ஹாசனை கொண்டாடிய சிதம்பரத்தை தற்போது கோலிவுட்டே கொண்டாடி வருகிறது. 

இதையும் படியுங்கள்... ஹவுஸ்புல் காட்சிகள்! தமிழ்நாட்டில் பிரேமம் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios