“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலமாக தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களில் முல்லையாக வலம் வந்த விஜே சித்ரா கடந்த 9ம் தேதி அதிகாலை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல என்றும், அவருடன் தங்கியிருந்த கணவர் ஹேமந்த் ரவி மீது சந்தேகம் உள்ளதாகவும் சித்ராவின் தாய், தந்தை குற்றச்சாட்டினர். இதையடுத்து சித்ராவின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. அதில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும், அவருடைய முகத்தில் இருக்கும் நகக்கீறல்கள் அவருடைது தான் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் திடீர் முடக்கம்... வைரலாகும் கடைசி பதிவு...!

நேற்று சித்ராவின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதில் ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக சித்ராவின் தாயார் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியது. அதாவது ஹேமந்த்  தான் தனது மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர் குடிகாரர் என்பது தெரியாமல் திருமணத்திற்கு முடிவு செய்துவிட்டோம் என்றும் கதறி அழுதார். இதனால் அனைவரது சந்தேக பார்வையும் ஹேமந்த் மீது திரும்பியது. 

இந்நிலையில் சித்ராவின் மரணம் குறித்து ஹேமந்தின் பெற்றோர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில், சித்ரா மிகவும் தைரியமான பெண். எங்களுக்கே அவள் தான் நிறைய விஷயங்களில் தைரியம் சொல்வார். அவர் எப்படி இப்படியொரு முடிவெடுத்தார் என தெரியவில்லை என பதிலளித்துள்ளார். 

 

இதையும் படிங்க: குழந்தை முதல் குமரி வரை மாறாத புன்னகையுடன் விஜே சித்ரா... யாரும் அதிகம் பார்த்திடாத புகைப்படங்கள்....!

மேலும் ஹேமந்த் மீதான குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அவருடைய தாயார், எப்போதாவது வெளியே செல்லும் போது குடிப்பார். அதை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதை எல்லாம் ஒரு கெட்டப்பழக்கம் என குறை சொல்கிறார்கள். சித்ராவின் அம்மாவையும் என் மகன் அம்மா என்று தான் அழைப்பான். அப்படியிருக்க அவன் மீது இப்படி பழி சுமத்துவது ஏன் என தெரியவில்லை எனக்கூறியுள்ளார்.