தற்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவிடமும், மாமனார் ரவிச்சந்திரன், மாமியார் வசந்தாவிடமும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்தி வருகிறார். 

 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில், சித்ராவுடன் தங்கியிருந்த அவருடைய கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி சித்ராவின் உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றிய சீரியல் நடிகர், நடிகைகள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த 6 நாட்களாக போலீசார் ஹேமந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் இடையே ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ் அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: சித்ராவின் நடத்தையில் சந்தேகம்?... ஹேம்நாத்திடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்...!

தற்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவிடமும், மாமனார் ரவிச்சந்திரன், மாமியார் வசந்தாவிடமும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே சித்ராவின் கணவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது பலரும் சந்தேகங்களை எழுப்பி இருந்த நிலையில், இன்றைய விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.