நாஞ்சில் விஜயன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா? டாய்லெட்டில் உறங்கினேன்! இப்போது ஜெயித்து கார் வாங்கி இருக்கிறேன்..

Nanjil vijayan buying a new car: விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் புது கார் வாங்கி , புகைப்படம் வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை மக்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 

Heart melting challenging story behind Nanjil Vijayans success life

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்தது. 

Heart melting challenging story behind Nanjil Vijayans success life

நாஞ்சில் விஜயன் ஆரம்ப கால பயணம்:

இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அடிக்கும் லூட்டி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இவரும் ராமரும் சேர்ந்து செய்த ’சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ காமெடி எபிசோடு பட்டி தொட்டி எங்கும் பரவி சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.

Heart melting challenging story behind Nanjil Vijayans success life

அடுத்தடுத்த தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து வருகிறார். இதையடுத்து, இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி பல்வேறு சர்சைகளில் சிக்கி மாட்டிக்கொண்டு இருக்கும் இவர், மீண்டும் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

நாஞ்சில் விஜயன் தற்போதைய பயணம்: 

தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மக்கள் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் புது கார் ஒன்று வாங்கி உள்ளார். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 நாஞ்சில் விஜயன் வாங்கிய புது கார்:

Heart melting challenging story behind Nanjil Vijayans success life

சமீப காலமாகவே சித்து ஸ்ரேயா, மணிமேகலை, சரண்யா, கேப்ரிலா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் புது கார் வாங்கி அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள். 

அந்த வரிசையில், இணைத்து உள்ள நாஞ்சில் விஜயன் தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் புகைப்படத்தை வெளியிட்டு  பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

நாஞ்சில் விஜயன் உருக்கமான பதிவு:

Heart melting challenging story behind Nanjil Vijayans success life

அதில் அவர்,  ”பல கனவுகளுடன் சென்னைக்கு ரயில் ஏறி வந்தேன். அப்போது டாய்லெட் பக்கத்தில் இருந்த சின்ன இடத்தில் அமர்ந்து வந்தேன்..ஆனால், தற்போது எனக்கு கனவு நினைவானது போல இருக்கிறது. எதுவும் முடியாதது இல்லை. 

இப்போது என் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம்” என்று உருக்கமாக கூறிப்பிட்டுள்ளார். தற்போது, இவரின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. பலரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க....Nayanthara: ஜூன் 9ல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணமா? விரக்தி அடைந்த உறவினர்...என்ன சொன்னார் தெரியுமா..?


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios