Pongal Celebrations 2024 : தை பிறந்தால் வழி பிறகும் என்பார்கள், அந்த வகையில் இந்த தை திருநாளாம் பொங்கல் திருநாளில் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் பொங்கல் நல்வாழ்த்துகளை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகையும், தயாரிப்பாளரும், அரசியல் தலைவருமான குஷ்பூ சுந்தர் அவர்கள் மக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதேபோல பிரபல நடிகை நயன்தாரா அவர்கள் தனது புகைப்படத்தை வெளியிட்டு மக்கள் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

தற்பொழுது நல்ல பல திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான சரத்குமார் அவர்களும் அவரது மனைவியும் மூத்த தமிழ் திரை உலக நடிகையுமான ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் தங்கள் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தற்பொழுது தமிழக மக்களுக்கும் தங்களது ரசிகர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் மற்றும் தாய் தந்தையரோடு இணைந்து இந்த பொங்கல் திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வருகிறார். இந்த பொங்கல் அவருக்கு மிகவும் அதிரடி பொங்கலாக மாறி உள்ளது, காரணம் அவருடைய கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Scroll to load tweet…

முன்னாள் நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது மனைவியோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது தை திருநாள் வாழ்த்துக்களை மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

கமல் 237.. இந்தியன் 3.. Thug Life.. ஒரே மேடையில் 3 இன்ப அதிர்ச்சிகளை தந்த "ஆண்டவர்" - ஆடிப்போன ரசிகர்கள்!