கமல் 237.. இந்தியன் 3.. Thug Life.. ஒரே மேடையில் 3 இன்ப அதிர்ச்சிகளை தந்த "ஆண்டவர்" - ஆடிப்போன ரசிகர்கள்!

Ulaga Nayagan Kamalhaasan : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அவருடைய 237வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bigg Boss Season 7 Grand Finale Ulaga Nayagan Kamalhaasan Confirmed his three movies ans

கடந்த மூன்று மாத காலமாக உச்சகட்ட எதிர்பார்ப்புகளோடு நகர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா வென்றுள்ள நிலையில், இரண்டாவது இடத்தை மணிசந்திராவும், மூன்றாவது இடத்தை மாயா எஸ் கிருஷ்ணனும் பிடித்துள்ளனர். 

அவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நிறைவடையவிருந்த நேரத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல்களை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக இன்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்வில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பு மற்றும் அறிவு ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். 

"அவர் 1.5 பில்லியன் மக்களின் தலைவர்".. மாலத்தீவு பயணத்தை ரத்து செய்கின்றேன் - அதிரடியாக அறிவித்த நாகர்ஜுனா!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய 237வது திரைப்படத்தை அவர்கள் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்பு மற்றும் அறிவு ஆகிய இருவர் மேல் உள்ள அதீத நம்பிக்கையே அவர்களுக்கு இந்த படத்தை கொடுக்க காரணமாக அமைந்தது என்று உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் அன்பு மற்றும் அறிவை வெகுவாக பாராட்டினார். 

அதேபோல இந்தியன் 2 திரைப்பட பணிகள் முடிவடைந்து விரைவில் அது வெளியாக உள்ள நிலையில், மீண்டும் இயக்குனர் சங்கர் அவர்களுடன் இணைந்து இந்தியன் திரைப்படத்தின் 3ம் பக்கத்தில் நடிக்கவுள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார். அதேபோல சுமார் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் அவர்களுடன் அமர்ந்து தான் கதைகளை பேசி வருவதாகவும் கூறினார். 

விரைவில் Thug Life திரைப்படத்திற்கான தகவல்கள் வெளியாகும் என்றும், இந்த கதை மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இப்படி ஒரே மேடையில் மூன்று படங்களின் அப்டேட்டை கூறி அவருடைய ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Game Changer முதல்.. Rising Star வரை.. பிக் பாஸ் போட்டியாளர்கள் 9 பேருக்கு Surprise Awards - முழு லிஸ்ட் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios