நடிகை ஹன்சிகாவின் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில், அவரின் திருமண டீசர் வெளியாக உள்ள அறிவிப்பை டிஸ்னி ஹாட் ஸ்டார் தளம் வெளியிட்டுள்ள நிலையில், நயன்தாரா திருமண வீடியோ இதுநாள் வரை வெளியாகாததற்கு என்ன காரணம் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரபலங்கள், சமீப காலமாக தங்களின் திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்பும் உரிமையை, முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு வழங்கி அதன் மூலமும் காசு பார்த்து வருகிறார்கள். இந்த முறையை கோலிவுட் திரையுலகில் துவங்கி வைத்த பெருமை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியையே சேரும்.
இவர்களின் திருமணம், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மிகவும் பிரமாண்டமாக... சென்னை மகாபலிபுரம் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், டீசர் மட்டுமே வெளியிட்டு... விரைவில் திருமண வீடியோ வெளியாகும் என கூறியது. இவர்களின் திருமணம் நடந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியும் தற்போது வரை வெட்டிங் வீடியோ ரிலீஸ் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் ஆகி, ஒரு மாதம் மட்டுமே ஆகவுள்ள நிலையில், இவரின் திருமணம் குறித்த டீசர் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என ஹாட் ஸ்டார் தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டீசர் வெளியான ஒரு மாதத்தில் திருமண வீடியோவும் வெளியாகும் என கூறப்டுகிறது.இவரின் இந்த திருமண வீடியோவுக்கு 'லவ் ஷாடி டிராமா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மனையில் பரிதாபமாக சிகிச்சை பெரும் இலியானா..! என்ன ஆச்சு..?

ஹன்சிகாவின் திருமண வீடியோ ரிலீசுக்கு மின்னல் வேகத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்க, ஏன் நயன்தாராவின் திருமண வீடியோ மட்டும் வெளியாக வில்லை என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாராவின் திருமண வீடியோ டாக்குமென்டரியை கெளதம் மேனன் இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பின்னர் தான் இயக்க வில்லை என அவரே விளக்கம் கொடுத்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இதனை இயக்கி வருவது விக்னேஷ் சிவன் தானாம்.
மகனை தூக்கி கொண்டு திருப்பதி ஏழுமலையாளை தரிசித்த காஜல் அகர்வால்..!

இன்னும் இதற்கான பணிகள் முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கான ஷூட்டிங் பணிகள்... இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளதாகவும், அதை தொடர்ந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் 3 மாதங்களில் நயன்தாரா திருமண வீடியோ வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
