கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டி... கடற்கரையில் 2 பீஸ் உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூஜா ராமசந்திரன்!
பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன்... தன்னுடைய பேபி பம்ப்பை காட்டியபடி, 2 பீஸ் உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, பின்னர் தமிழில் குன்சைத்ர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.
இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இரண்டாவதாக... தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், மலையாள நடிகருமான ஜான் கோகென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் கோகென், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா படத்தில் வேம்புலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இதை தொடர்ந்து சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவருமே ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜோடி என்பதால் , திருமணத்திற்கு பின்னர் உடல்பயிற்சி, மற்றும் யோகா செய்து வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட பூஜா ராமச்சந்திரன், கர்ப்பமான நேரத்தில் கூட, குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டி, வெள்ளை நிற 2 பீஸ் உடையில் இவர் கடற்கரையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.