மருத்துவ மனையில் பரிதாபமாக சிகிச்சை பெரும் இலியானா..! என்ன ஆச்சு..?
நடிகை இலியானா மருத்துவமனையில் படுத்திருப்பது போன்று வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
டோலிவுட் திரையுலகில், மற்றும் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக அறியப்படும் இலியானா, தன்னுடைய வளைவு நெளிவுகளால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர்.
சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மகனை தூக்கி கொண்டு திருப்பதி ஏழுமலையாளை தரிசித்த காஜல் அகர்வால்..!
இலியானா தனது நோய்க்கான காரணங்களை கூறாத நிலையில், கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றாலும்... ஃபுட் பாய்சன் காரணமாக இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இலியானா தன் உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கினார், அங்கு பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றிபெற்றதால், பல தமிழ் பட வாய்ப்புகள் இவரது கதவை தட்டியபோதும், பாலிவுட் பட வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தியதால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.