g.v.prakash act with thamanna
2011 ஆண்டு , நாகசைதன்யா மற்றும் தமன்னா நடித்து தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 100 % லவ். இந்த திரைப்படத்தை தெலுங்கில் இயக்கிய பி. சுகுமார் தமிழில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாக தமன்னாவையே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜி.வி. பிரகாஷ்குமார் தான் இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் , தில்வாலே , சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டட்லி இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
மேலும் இந்த படம் குறித்து, விரைவில் அதிகார பூர்வ தகவல் வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
