நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் 'சூரரை போற்று' இந்த படத்தின், செகண்ட் லுக் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் 'சூரரை போற்று' இந்த படத்தின், செகண்ட் லுக் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து, சூர்யாவை வைத்து வேல், ஆறு, சிங்கம் சீரிஸ், ஆகிய வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் ஹரியின் கூட்டணியில், சூர்யா அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இதை தொடர்ந்து, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் சூர்யாவின் 40 ஆவது படமாக உருவாக உள்ளது. இது குறித்த அதிகார பூர்வ தகவலை தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த படம் குறித்த மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் 75 ஆவதாக இசையமைக்கும் படமாக இப்படம் உருவாகிறது. இந்த தகவலை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Scroll to load tweet…