உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார். 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார். 

அதனாலும் எதுவும் நடக்கவில்லை, ஒரு வேலை இந்த ஓவர் கொழு, கொழுப்பா இருக்கிறது தான் பிரச்சனையா என யோசித்த ஹன்சிகா. கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தற்போது சிக்கென ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ளார்.

அதே லுக்கில் செம்ம ஸ்டைலாக ஹன்சிகா மோத்வானி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. க்யூட் மார்டன் உடையில் ஹாட் பேபியாக மாறியிருக்கும் ஹன்சிகா மனதை மயக்கினாலும், ஏன் இப்படி இளைச்சி துரும்பா போயிட்டீங்க, உங்க பப்ளி லுக் தானே உங்களுக்கு அழகு என குட்டி குஷ்பூவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.