Asianet News TamilAsianet News Tamil

Vadivelu Health : வடிவேலுவின் தற்போதைய நிலை என்ன? சற்றுமுன் வெளியான தகவல் நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் (vadivelu) உடல்நிலை குறித்து சற்று முன் வெளியாகியுள்ள தகவலில், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுவதால், வடிவேலுவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

good news for Actor vadivelu he is discharged from hospital
Author
Chennai, First Published Jan 1, 2022, 7:48 PM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் (vadivelu) உடல்நிலை குறித்து சற்று முன் வெளியாகியுள்ள தகவலில், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுவதால், வடிவேலுவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு (vadivelu). இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: அட கடவுளே இது என்ன உனக்கு வந்த சோதனை? அன்னபூரணியை தொடர்ந்து அம்மன் அவதாரம் எடுத்த டிக் டாக் பிரபலம்!

 

good news for Actor vadivelu he is discharged from hospital

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு. சில ஆண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் தினந்தோறும் மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு (Vadivelu). சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: RRR Movie: ராஜமௌலியை சுழட்டி அடிக்கும் சோதனை.! 'ஆர் ஆர் ஆர்' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

 

good news for Actor vadivelu he is discharged from hospital

இதையடுத்து சுராஜ் (Suraj) இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. இப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பூஜையோடு துவங்கியது. பின்னர் சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார்.

மேலும் செய்திகள்: Malavika Mohanan: கிழிஞ்சிட போகுது? உடலோடு ஒட்டிய லெதர் உடையில்.. நியூ இயர் ஸ்பெஷல் கவர்ச்சி காட்டும் மாளவிகா!

 

good news for Actor vadivelu he is discharged from hospital

அந்த பணிகளை முடித்துக்கொண்டு அண்மையில் சென்னை திரும்பிய வடிவேலுவுக்கும் மற்றும் இயக்குனர் சுராஜுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது. அந்த வகையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன், வெளியிடப்பட்ட தகவலில்... வடிவேலு பூரண உடல் நலம் பெற்று தற்போது, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால், எப்போது வடிவேலுக்கு உடல் நலம் குணமடையும் என காத்திருந்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios