Asianet News TamilAsianet News Tamil

'காட்மேன்' வெப் சீரிஸ் தயாரிப்பாளருக்கு இரண்டாவது முறையாக சம்மன்!

குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரித்துள்ளதாக, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது 'காட்மேன்' இணையதள தொடரை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது மீண்டும், இந்த வெப் சீரிஸ் தொடர் தயாரிப்பாளருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 

godman web series producer got second samman
Author
Chennai, First Published Jun 4, 2020, 12:27 PM IST

குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரித்துள்ளதாக, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது 'காட்மேன்' இணையதள தொடரை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது மீண்டும், இந்த வெப் சீரிஸ் தொடர் தயாரிப்பாளருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: குழந்தையாக இருக்கும் போதே தமிழ் மேகசின் கவர் போட்டோவில் இடம்பிடித்த ராஷ்மிகா! வைரலாகும் புகைப்படம்..!
 

கடந்த இரண்டு, வாரத்திற்கு முன் பிரபல தனியார் தொலைக்காட்சியின்  ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 'காட்மேன்' டீசர். 

godman web series producer got second samman

இதில் சாமியார் வேடத்தில் தோன்றிய நடிகர் ஜெயப்ரகாஷ், ஒரு பிராமணர் மட்டும் தான் வேதம்  படிக்க வேண்டும் என எந்த சாஸ்திரம் கூறியிருக்கிறது? என கேள்வி எழுப்பி ’ ‘என்னைச் சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக உள்ளனர்’ என சர்ச்சையான வசனம் பேசினார்.

மேலும் செய்திகள்: மெல்லிய புடவையில்... அதிரி புதிரி கவர்ச்சி இளசுகள் மனதை கட்டி இழுக்கும் ரேஷ்மா! இது உங்களுக்கே ஓவரா தெரியல
 

பின் டானியல் பாலாஜியை ’நீ வேதம் படிக்க வேண்டும் அய்யனார்... என கூறுவார். இதை தொடர்ந்து நடிகர் டானியல் பாலாஜியின் சில உச்ச கட்ட ஆபாச காட்சிகள் காட்டப்படுகிறது. பின்  ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டப்போகிறேன் என கூறுவார் ஜெயப்ரகாஷ்.’

godman web series producer got second samman

இதை தொடர்ந்து, ஜெயப்ரகாஷை போலீசார் அழைத்து செல்லப்படும் காட்சிகள், சோனியா அகர்வால் மிரட்சியுடன் பார்ப்பது போன்ற சில விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா?
 

இதில் குறிப்பாக, ஒரு சமூகத்தினரை அவதூறாக காட்டும் விதத்தில், சர்ச்சை வசங்கள் இடம் பெற்றதால். 'காட்மேன்' வெப் சீரிஸுக்கு எதிராக, அந்தணர்களை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளதாக கூறி, காவல் நிலையங்களில் புகார்களும் குவிந்தது. இதனால் பிராமணர் அமைப்புகள் மட்டுமல்லாது, இந்து அமைப்புகளும் காட்மேன் வெப் சீரிஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே போல் பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகரும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

godman web series producer got second samman

இதை தொடர்ந்து, அந்த தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இருந்து, 'காட்மேன்' டீசர் அதிரடியாக நீக்கப்பட்டது. எனினும் இந்த வெப் சீரிஸ், ஜூன் 12 ஆம் தேதியில் இருந்து வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தொடர் ஒளிபரப்பை தனியார் தொலைக்காட்சி நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: முன்னாள் காதலர் பிரபுதேவாவுடன் நயன்தாரா...? வாய்திறப்பாரா விக்னேஷ் சிவன்!
 

இந்நிலையில் தற்போது, 'காட்மேன்' வெப் சீரிஸின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், மற்றும் தயாரிப்பளார் இளங்கோவன் ஆகியயோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக சித்தரித்ததாக அதிரடியாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் இந்த 'காட்மேன்' வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள, நடிகர் டானியல் பாலாஜி, ஜெயப்ரகாஷ், மற்றும் சோனியா அகர்வால் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

godman web series producer got second samman

ஏற்கனவே 'காட்மேன்' வெப் தொடரின் தயாரிப்பாளருக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios