குழந்தையாக இருக்கும் போதே தமிழ் மேகசின் கவர் போட்டோவில் இடம்பிடித்த ராஷ்மிகா! வைரலாகும் புகைப்படம்..!
கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, குழந்தையாக இருக்கும் போது, முதல் முறையாக தமிழ் மேகசின் ஒன்றின் கவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட தற்போது அது வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா, தற்போது தமிழில் நடிகர் கார்த்தி நடித்து வரும், 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கியுள்ளது.
எப்போதும் பிஸியாக சுற்றி கொண்டிருந்த ராஷ்மிகா தற்போது, பட வேலைகள் இல்லாததால் தன்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.
கடந்த வாரம் கூட, வீட்டில் உள்ளது குறித்தும் தன்னுடைய பெற்றோர்கள் குறித்தும் மிகவும் உருக்கமாக ஒரு பதிவை ராஷ்மிகா வெளியிட்டிருந்தார்.
கன்னடத்தில் நடிகையாக இருந்த போது, பெரிதாக பிரபலமில்லாத நடிகை ராஷ்மிகாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது, இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த 'கீதா கோவிந்தம் திரைப்படம் தான்.
இந்த படத்தில் இவருடைய அழகு மற்றும், இவர் விஜய் தேவரகொண்டா போல் கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
இந்த படத்தை தொடர்ந்து இந்த சூப்பர் ஹிட் ஜோடி, டியர் காம்ரேட் என்கிற படத்திலும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தையும் தாண்டி, விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி, ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார் நடிகை ராஷ்மிகா.
இந்நிலையில் தான் தற்போது இவர் முதல் முறையாக, தமிழ் மேகசின் கவர் போட்டோவில் இடம்பிடித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரஷ்மிகா 2001 ஆம் ஆண்டில் ஒரு சிறு குழந்தையாக தனது முதல் பத்திரிகை அட்டை தமிழ் குழந்தைகள் பத்திரிகையான கோகுளத்துக்காக இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இதில் தான் பரிசாக பெற்ற இரண்டு கை கடிகாரத்துடன் போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.