இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான 'காட்மேன்' டீசரில்... அந்தணர்களை அவமதிக்கும் விதமாக சர்ச்சை வசனங்களும், உச்சகட்ட ஆபாச காட்சிகளும் இடம்பெற்றிருந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து தற்போது 'காட்மேன்' டீசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: அமலாபாலின் முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய்க்கு குழந்தை பிறந்தாச்சு...! பிரபலங்கள் வாழ்ந்து..!
 

இயக்குனர் பாபு யோகிஸ்வரன், இயக்கத்தில் பிரபல தொலைக்காட்சியின் சார்பில் விரைவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருந்த வெப் சீரிஸ் 'காட்மேன்'. இதில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நேரடியாகவே குறிப்பிட்ட சமூகத்தை விமர்சித்து பேசிய காட்சிகளும், டேனியல் பாலாஜி ஒரு பெண்ணுடன் உச்ச கட்ட ஆபாச காட்சியிலும் நடித்தது ஒளிபரப்பப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்: சமூகவலைத்தளத்தில் முட்டி மோதிக்கொள்ளும் சமந்தா - பூஜா ஹெக்டே ரசிகர்கள்!
 

இந்த வெப் சீரிஸ் அந்தணர்களை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளதாக கூறி, காவல் நிலையங்களில் புகார்களும் குவிந்தது. இதனால் பிராமணர் அமைப்புகள் மட்டுமல்லாது, இந்து அமைப்புகளும் காட்மேன் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், காட்மேன் வெப் தொடரில் பிராமணர்களை பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களும், கொச்சைப்படுத்தும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலமாக வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வேண்டுமென்றே குறிப்பிட்ட சமூகத்தினரை அவமானப்படுத்தி அவர்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், காட்மேன் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், zee 5 நிர்வாக இயக்குநர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: ஹீரோ கூட ஓகே... இது ஒத்து வருமா..! ரிஸ்க் எடுக்க துணிந்த வடிவேலு?
 

இந்நிலையில், யூடியூபில் இருந்து ’காட்மேன்’ டீசரை ஜீ5 நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால் இந்த வெப் தொடர்... குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சர்ச்சையை ஏற்படுத்திய, வசங்கள் அனைத்தையும் நீக்கி, புதியதாக வேறு ஒரு டீசர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.