வலைதளங்களில் என்னை ஓவராக வம்பிழுக்கிறார்கள். நான் குடிக்கிறேன் அல்லது எக்கேடும் கெட்டுப்போகிறேன். அவர்களுக்கென்ன. தங்கள் சொந்த வீடுகளில் உள்ள குடிநோயாளிகளை முதலில் திருத்தப் பாருங்கள்’ என்று ராவாக ட்விட் பண்ண ஆரம்பித்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம்.

 

கடந்த வாரம் ட்ரங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கி 3,500 தண்டம் கட்டியதிலிருந்தே மிகுந்த மனக் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார் காயத்ரி. முதலில் குடித்து விட்டு வந்த நான் அவளல்ல’ என்ற அவரது பாச்சா பலிக்காமல் போகவே, தனது பி.ஜே.பி. கட்சியினர் மீது கொஞ்சம் சாணி அடித்துப் பார்த்தார். அவர்கள் பதிலுக்கு அதே சாணியை கூடையில் எடுத்து அடிக்க ஆரம்பிக்கவே தற்போது மறுபடியும் யுடர்ன் அடித்து நெட்டிசன்கள் மீது நொட்டை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். 

தனது குடிகாரி இமேஜை கொஞ்சம் குறைப்பதற்காக 45 நாட்கள்  சபரிமலைக்கு விரதம் இருக்கப்போவதாக அவர் நேற்று அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவரது ரசிகக் கண்மணிகள், ‘அம்மா தாயே ஐயப்பன் கிட்ட போறப்பவாவது சரக்கடிக்காம போ’ என்று கமெண்ட் அடிக்க ஆரம்பிக்கவே,’ நான் விரதம் இருக்கப்போறேன்னுதானே சொன்னேன். கோயிலுக்குப் போறதா சொல்லவே இல்லையே’ என்று ஜகா வாங்கிவிட்டு,’நான் குடிக்கிறேன்,சாப்பிடுறேன், படுக்கிறேன்ங்குறதெல்லாம் என்னோட பிரச்சினை. போய் அவனவன் வீட்டுப் பிரச்சினயைப் பாருங்க’ என்று சாமியாட ஆரம்பித்திருக்கிறார்.