தல அஜித் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் நடிக்க காத்து கொண்டிருக்கும் நிலையில், முதல் முறையாக அஜித்தின் மனைவி ஷாலினி நடிகை ஒருவருக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

தல அஜித் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் நடிக்க காத்து கொண்டிருக்கும் நிலையில், முதல் முறையாக அஜித்தின் மனைவி ஷாலினி நடிகை ஒருவருக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி', 'மகாநதி' ஆகிய படங்களில் நடித்த துல்கர் சல்மான், அடுத்ததாக நடித்து வரும் 'வான்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் இயக்குனர் பிரியதர்ஷனின் மற்றும் நடிகை லிஸியின் மகளுமான கல்யாணி. தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் மலையாளத்தில் இவரை நடிக்க வைக்கவும் சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில், முக்கிய கதாப்பாத்திரமான, பாலியல் தொல்லைக்கு உள்ளான மூன்று பெண்களில் ஒருவராக இவர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் இவர் நடிக்க முக்கிய காரணம் அஜித்தின் மனைவி ஷாலினிதானாம். இவர்தான் முதல்முறையாக தல அஜித் நடிக்கும் படத்திற்கு கல்யாணியை சிபாரிசு செய்துள்ளாராம்.