கொரோனா பிரச்சனை தீர்த்தாலும் தீரலாம், ஆனால் வனிதா - பீட்டர் பால் மூன்றாம் கல்யாண பஞ்சாயத்து முடியாது போல் தெரிகிறது. வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்ததில் இருந்தே ஒரே புகார் மயமாக இருக்கிறது. முறையாக விவாகரத்து பெறாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி ஹெலன் எலிசபெத் வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்கு பதிலடியாக வனிதாவே என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என வனிதா பதில் புகார் கொடுத்தார். 

 

இதையும் படிங்க: இப்ப கூட இவ்வளவு கிளாமரா?... செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் படுக்கையறை போட்டோ...!

தற்போது தன்னுடைய திருமணம் குறித்து யூ-டியூப் சேனலில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சிப்பதாக கூறி சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் எலிசபெத், “நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனது பதிலாக வனிதா வீட்டிற்கு போய் பீட்டர் பாலை இழுத்துக்கிட்டு வந்திருக்கனும். வனிதா வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் என்ன சொல்கிறாரோ, அதை தான் பீட்டர் பால் செய்கிறார். விஷயம் இவ்வளவு வெளியே தெரிஞ்ச பிறகும் ஏன் பீட்டர் பால் மக்களிடம் பேசவில்லை. எந்த பிரச்சனையும் கோர்ட்டில் தான் பார்ப்பேன் என பீட்டர் பால் கூறியுள்ளதாக சொல்கிறார்கள். 

 

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருக்கும் மீரா மிதுன் ... புது சகாப்தம் படைக்க அழைப்பு வேற...!

“போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க கூட ஏன் பீட்டர் பாலை அழைத்து வரவில்லை. ஏன் புருஷனை உன் வீட்டில் வச்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு. தரதரன்னு அடிச்சிட்டு இழுத்துக்கிட்டு வரவா?, அதுக்கும் நான் ரெடி.  என பகிரங்க சவால் எல்லாம் விட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா தனது யூ-டியூப் சேனலில் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

அதில் வனிதாவும், பீட்டர் பாலும் இணைந்து ப்ரோமோவில் தோன்றுகின்றனர். ப்ரோமோவில் வனிதா, பீட்டர் பாலிடம் நான் உங்களை பூட்டி வைத்துள்ளேனா? என கேட்க அதற்கு பீட்டர் பால் ஆம் என் இதயத்தில் என பதில் அளிக்கின்றார்.தொடர்ந்து தனது முதல் மனைவி குறித்து பேசும் பீட்டர் பால், ஒரு கஷ்டத்தில் நான் இருக்கும் பொழுது என்னை வந்து பார்க்காதவர் ஒரு பெண்ணா? அந்த இடமும் எனக்கு சரி இல்லை. அதனால் நான் குடித்தேன். என் குழந்தையை பார்க்க நான் வாசலில் சென்று நின்றேன். எனக்கு பணம் கொடு, செக்காக வேண்டாம் கேஷ் மட்டும் கொடு என கேட்டனர். நான் என்ன அந்த அளவு மாங்காவா என கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் இருவருடைய ரொமான்ஸைப் பார்த்து செமம் கடுப்பில் உள்ளனர். இதோ அந்த வீடியோ...