விஸ்வாசம் படம் குறித்து கடந்த சில வாரங்களில் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்த செய்திகளாக வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இந்தச் செய்தி அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தரப்போகிறது. 

விஸ்வாசம் படம் ஓடிய தியேட்டரில் அஜித் கட் அவுட் சரிந்து ரசிகர்கள் காயமடைந்த நிகழ்வு. விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்காத தந்தையை தீ வைத்து எரித்த சம்பவம். தியேட்டரில் கத்தி குத்து போன்ற நிகழ்வுகளை கண்டிக்காத அஜித் மீது எஃப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, “தற்போது வெளியாகும் முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களில், எந்த படம் வெற்றி பெறும், தோல்வி பெறப்போகும் படம் எது என்பது அரசு உட்பட சிலரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விடுகிறது. அண்மையில் வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மகன் எரித்த சம்பவம், அஜித் கட் அவுட் சரிந்து விபத்து, தியேட்டரில் இருக்கை கிடைப்பதில் பிரச்னையால் கத்தி குத்து என அசம்பாவிதங்கள் நடக்கின்றன. 

இது போன்று ரசிகர்களின் தவறான செய்கைகளுக்கு அஜித் மட்டுமல்ல, ரசிகர்களை கட்டுப்படுத்த ரஜினி கூட கருத்து தெரிவிக்கலாம். இதை எல்லாம் தட்டிக் கேட்காத அஜித் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும்.” என அவர் அதிரடியாய் வலியுறுத்தி உள்ளார்.