திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் தடை நீக்கம்! தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது!

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அந்த தடை நீங்கி விட்டதாக இசைக்கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளதோடு மட்டுமின்றி, தேர்தல் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
 

Film Musicians Union election ban lifted new election date announced mma

தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த தேர்தல் நடைபெற கூடாது என சபேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் சங்க விதிகளை மீறி தேர்தல் நடத்தப்படுவதாகவும், எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் தற்காலிக உறுப்பினர்களுக்கும், இணை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, தீர்மானத்திற்கு சங்கங்களின் பதிவாளரிடம்  ஒப்புதல் பெரும் வரை, தேர்தல் நடத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிமன்றம், இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தது. எனவே கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்தல், கடந்த ஐந்து மாதங்களாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில்... தற்போது இடைக்கால தடை நீங்கி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளதாக திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Serial Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த ஜீ தமிழ்! விஜய் டிவி - சன் டிவி சீரியல்களுக்கு டஃப்!

Film Musicians Union election ban lifted new election date announced mma

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "மாண்புமிகு சென்னை  உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த W.P. No.27894 of 2023 மற்றும்   W.M.P. No. 27884 & 27385 of 2023 மனுக்கள் மீது 06/02/2024, அன்று இறுதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . அதன்படி மேற்குறிப்பிட்டுள்ள ரிட் மனுக்கள் தள்ளுபடியாகி இருப்பதால் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது.

கந்துவட்டி கொடுமை!! துணை நடிகரின் மனைவி - மகனை கடத்தி சென்று.. 2 மாதம் தனி அறையில் அடைத்த கும்பலால் பரபரப்பு!

எனவே ஏற்கனவே 23-09-2023 தேதியிட்ட தேர்தல் அதிகாரியின் அறிவிப்பின் தொடர்ச்சியாக வருகின்ற 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2023 – 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கும்ப்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios