Asianet News TamilAsianet News Tamil

கந்துவட்டி கொடுமை!! துணை நடிகரின் மனைவி - மகனை கடத்தி சென்று.. 2 மாதம் தனி அறையில் அடைத்த கும்பலால் பரபரப்பு!

திருச்சியில், 6 லட்சம் கத்துவந்து வாங்கியதாக.. துணை நடிகரின் மனைவி மற்றும் மகன் கடத்தி செல்லப்பட்டு தனி அறையில் 2 மாதம் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

kanthuvatti terrible supporting actor wife and son kidnapped in trichy mma
Author
First Published Feb 15, 2024, 3:47 PM IST

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் விஸ்வாஷ் நகரில் வசித்து வருபவர் துணை நடிகரான மதியழகன். 55 வயதாகும் இவருக்கு, மாலதி என்கிற 46 வயது மனைவி, மற்றும் நடராஜ் என்கிற மகன் ஒருவரும் உள்ளனர். இந்நிலையில் மதியழகனின் மனைவி மாலதி குடும்ப கஷ்டத்திற்காக உமாராணி என்பவரிடம் ஆறு லட்சம் கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காததால், உமாராணி தொடர்ந்து மாலதிக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன், மாலதியையும் அவருடைய மகன் நடராஜனும் கடத்திய உமாராணி... மாலதியை தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து, கடுமையாக தாக்கி தன்னுடைய வீட்டு வேலைகளை செய்ய வைத்துள்ளார். வேலை செய்த நேரம் போக, தனி அறையில் அவரை அடைத்து வைத்துள்ளார். அதே போல் நட்ராஜை, அவரின் அம்மா மாலதியுடன் தங்க வைக்காமல் வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

திடீரென மனைவியும், மகனும், காணாமல் போனதால் உறவினர்கள் வீடு முதல் அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடி உள்ளார் மதியழகன். சில நாட்களுக்கு முன்பு தான் மாலதியையும், நடராஜையும், உமாராணி கடத்திய விஷயம் மதியழகனுக்கு தெரிய வந்தது. எனவே நீதிமன்றத்தில் பணி புரியும் தன்னுடைய தம்பி சதீஷ் உதவியுடன் உமாராணியை சந்திக்க திருச்சியில் உள்ள சில வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு நேரடியாக வீட்டிற்க்கே சென்றுள்ளனர்.

உமாராணி வீட்டிற்குள் யாரையும் சோதனை போட அனுமதிக்காத நிலையில், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் தனி அறையில் கடுமையாக தாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர். மாலதி அங்கு நடந்த கொடுமையால் கண்களில் கண்ணீருடன் பயந்து போய் பதட்டமாகவே இருந்தார். மேலும் தன்னுடைய மகனை மீட்டுத் தரக் கோரியும் போலீசாரின் காலில் விழுந்து கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது மதியழகனின் மகன் நடராஜை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

உமாராணி திருச்சி பாஜக காந்தி மார்க்கெட் மண்டல துணைத்தலைவராக உள்ளார். மேலும் பலருக்கு கந்துவட்டி கொடுப்பதையும் தன்னுடைய தொழிலாக செய்து வருகிறார். உமாராணியிடம் மாலதியை அடைத்து வைத்தது குறித்து கேட்டபோது, மாலதி பலரிடம் கடன் வாங்கி உள்ளதாகவும், அவரைக் காப்பாற்றவே இப்படி செய்ததாக கூறியுள்ளார். மேலும் போலீசார் இடம் இருந்து நழுவம் விதத்தில் அங்கிருந்து உடனே ஆட்டோவில் ஏரி சென்றார். அடுத்ததாக தப்பி சென்ற உமாராணியை சந்தித்து அவரிடம் நடராஜ் குறித்து விசாரிக்க முயற்சி செய்து வருகின்றனர் போலீசார். கந்து வட்டி பிரச்சனையால் கடந்த இரண்டு மாதமாக பெண் ஒருவரே, ஒரு பெண்ணை இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமை படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios