Film Employees Federation of South India leader asks Tamil film makers to conduct shoot inside Tamil Nadu
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்படத்தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, சமீபத்தில் ஒரு பேட்டியின் போது செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார். அதில் தமிழ்நாட்டிற்கு உள்ளே படப்பிடிப்பு நடைபெறும்போது எங்கள் திரைப்பட தொழிலாளர்கள் அதிகம் பயனடைகிறார்கள்.
காலா படப்பிடிப்பு தமிழ்நாட்டிற்குள், 12 கோடி ரூபாய் செலவில் செட் போட்டு நடைபெற்றது. அதனால் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு, ஆறு மாத காலம் வரை வேலைவாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இப்போதெல்லாம் காரணமே இல்லாமல் வெளிமாநிலங்களில் வைத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. சில பேருடைய வசதிக்காக வெளிமாநிலங்களில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். அதை நம் மாநிலத்தில் வைத்து செய்தால் தொழிலாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே.
அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படம் கூட ஹைதராபாத்தில் வைத்து நடை பெறுகிறது. இங்கு இல்லாத இடமா அங்கே இருக்கிறது. இனிமேல் இப்படி செய்யாதீர்கள்.நம் மாநிலத்தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பை அழித்துவிடாதிர்கள் என பேசியிருக்கிறார்.
