Asianet News TamilAsianet News Tamil

Vijay Antony: மகள் இறுதி சடங்கில் கண்ணீர் விட்டு கதறிய பாத்திமா விஜய் ஆண்டனி !! நெஞ்சை உலுக்கிய வார்த்தைகள்!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் இறுதி சடங்கின் போது... பாத்திமா விஜய் ஆண்டனி கதறி அழுதபடி கூறிய வார்த்தை அங்கிருந்தவர்கள் நெஞ்சங்களை கலங்க வைத்து.
 

Fatima Vijay Antony Tears At Daughter Meera Funeral mma
Author
First Published Sep 20, 2023, 5:49 PM IST | Last Updated Sep 20, 2023, 5:49 PM IST

தமிழ் திரையுலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி, மிக குறுகிய வருடங்களிலே, 'நான்' திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறி, அடுத்தடுத்து தன்னுடைய வளர்ச்சி பாதையை தேர்வு செய்து, அதில் வெற்றிகரமாக பயணித்து வந்தவர் விஜய் ஆண்டனி. இவருக்கு தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் ஆண்டனி, தொகுப்பாளினியான பாத்திமா என்பவரை காதலித்து, கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மீரா - லாரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மீரா செப்டம்பர் 19ஆம் தேதி, அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 16 வயதே ஆகும் மீராவின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் புதன்கிழமை (இன்று) காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. விஜய் ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால் அவரின் குடும்ப வழக்கப்படி, சர்ச்சில் தான் இவருடைய இறுதி சடங்குகள் நடந்தது.

Fatima Vijay Antony Tears At Daughter Meera Funeral mma

பொண்ணு பார்க்க போன போது... பெண்களிடம் ஆண்கள் கேட்க கூடாத கேள்வியை மனைவியிடம் கேட்ட அருண் விஜய்!

அப்போது  அவரது பாத்திமா விஜய் ஆண்டனி, மகள் சடலத்தின் முன்பு கண்ணீர் விட்டு கதறியபடி, "நான் உன்னை என் வயிற்றில், 10 மாதம் சுமந்தேன்... என்ன பிரச்சனை இருந்தாலும் நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே." இப்படி ஒரு முடிவை எடுத்துட்டியே... என அழுதது அங்கு கூடி இருந்த அனைவரது மனதையும் கலங்க செய்தது.

திரையுலகினர் அனைவரிடமும் நட்பு பாராட்டும் மனம் படைத்த விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து அறிந்ததுமே, அனிருத் ரவிச்சந்தர்,விஷால், ஹரீஷ் கல்யாண், பரத், ராதிகா, உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டும் இன்றி, விஜய் ஆண்டனிக்கு தங்களின் ஆறுதலையும் தெரிவித்து வந்தனர்.

Fatima Vijay Antony Tears At Daughter Meera Funeral mma

விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி சிகிச்சையில் இருந்த போது போல்டாக மீரா செய்த செயல்..!! அப்படி செய்தவரா தற்கொலை?

விஜய் ஆண்டனி தன்னுடைய மகளின் இழப்பால் துடித்து கொண்டிருக்கும் நிலையில்... அவருக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பல ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். தயாரிப்பாளர் தனன்ஜெயன், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலைத்தபோது, விஜய் ஆண்டனி பல மணிநேரமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றும், அவரை இப்படி பார்ப்பதே மிகவும் வேதனையாக உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios