வெளிநாட்டு பைக் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு நிலவியது.

துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் நடிக்க உள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு கடந்த மே மாதமே வெளிவந்தாலும், இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதனால் ரசிகர்களும் அப்டேட் எப்போ வெளியாகும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆனால் அஜித் இதைப்பற்றி கவலைப்படாமல் ஜாலியாக வெளிநாட்டில் தன்னுடைய பைக் சுற்றுலாவை மேற்கொண்டு வந்தார். நார்வே நாட்டில் அவர் நண்பர்களுடன் பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின. இதனிடையே விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிடப்போவதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது வதந்தி என தெரியவந்ததால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதையும் படியுங்கள்... ஆக்‌ஷன் ஹீரோவாக துல்கர் சல்மான் மிரட்டினாரா? சொதப்பினாரா? - கிங் ஆஃப் கொத்தா விமர்சனம்

Scroll to load tweet…

இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் சென்னைக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை அஜித் சென்னை விமான நிலையம் வந்தபோது அங்கு அவரைக் காண காத்திருந்த ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க சென்றனர். நின்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் அஜித் அவர்களுக்கு போஸ் எதுவும் கொடுக்காமல் விறுவிறுவென நடந்து சென்றார்.

Scroll to load tweet…

இருப்பினும் அவரை விடாத ரசிகர்கள் விரட்டி சென்று புகைப்படம் எடுக்க முயன்றனர். சில நிமிடங்களில் அங்கு ஏராளமான ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித் சென்னை திரும்பி உள்ளதால் விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு... குஷி புரமோஷனில் சமந்தா அருகில் உட்காரவே இத்தனை லட்சமா?