ஆக்‌ஷன் ஹீரோவாக துல்கர் சல்மான் மிரட்டினாரா? சொதப்பினாரா? - கிங் ஆஃப் கொத்தா விமர்சனம்

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Dulquer salmaan and Aishwarya lekshmi starrer King of Kotha movie twitter review

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கிங் ஆஃப் கொத்தா. இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் உடன் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவான இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படம் பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... வெற்றிமாறன் சொன்ன கிரிக்கெட் கதை.. மிஸ் ஆனதால் வருத்தப்படும் நடிகர் - மறுபடியும் உருவாக வாய்ப்பு இருக்கா?

Dulquer salmaan and Aishwarya lekshmi starrer King of Kotha movie twitter review

துல்கர் சல்மானின் ஒன்மேன் ஷோ தான் கிங் ஆஃப் கொத்தா. வழக்கமான யூகிக்கக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் மேக்கிங் அருமையாக உள்ளது. வில்லன் கேரக்டர் பலவீனமாக உள்ளதால் அது திரைக்கதையிலும் பிரதிபலித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இன்னும் நன்றாக எடுத்திருந்தால் படம் அருமையாக இருந்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.

கிங் ஆஃப் கொத்தா ஏமாற்றம் அளித்துள்ளது. முரண்பட்ட கதைக்களத்தால் ஆர்வத்தை தக்க வைக்க முடியாமல் போய் உள்ளது. இறுதியில் தாக்கத்தை ஏற்படுத்தவும் தவறி உள்ளது. படத்தில் துல்கர் சல்மானும், பின்னணி இசையும் தான் அருமையாக உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறார்.

கிங் ஆஃப் கொத்தா படத்தில் பின்னணி இசையால் சில காட்சிகள் உயிர்பெற்றுள்ளன. மற்றபடி, அனைத்தும் சுமார் தான். அதே பழைய டெம்பிளேட், நான் ஸ்டாப் கிரிஞ் டயலாக் எல்லாம் இணைந்து ஒரு ஆவரேஜான படத்தை கொடுத்துள்ளன. கிங் ஆஃப் கொத்தா துல்கர் சல்மான் ரசிகர்களுக்காக மட்டும் மற்றவர்கள் தவிர்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

கிங் ஆஃப் கொத்தா படத்தில் துல்கர் சல்மான், நடிகர்கள், இரண்டாம் பாதி, ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவை பாசிடிவ் ஆக அமைந்துள்ளன. படத்தின் நீளமும், முதல் பாதி இழுவையாக உள்ளதும் இப்படத்தின் நெகடிவ் ஆக உள்ளதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு... குஷி புரமோஷனில் சமந்தா அருகில் உட்காரவே இத்தனை லட்சமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios