கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு... அடல்ட் பட டீசரை வெளியிட்ட சர்ச்சை இயக்குநர்...!

இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81, 970ஆக உள்ளது.  ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அப்படி வந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

இந்நிலையில் நடிகை சமந்தா பார்த்த காரியம் நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

View this post on Instagram

🍞

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on May 15, 2020 at 1:36am PDT

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் கணவர் நாக சைதன்யாவுடன் பைக் ரெய்டு சென்றுள்ளார். கணவன், மனைவி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றிய புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்களும், சமந்தாவின் ரசிகர்களும் கொந்தளித்து போயுள்ளனர். அரசு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு போட்டால் இப்படி தான் உங்க இஷ்டத்துக்கு மீறுவீங்களா? என சகட்டு மேனிக்கு சாடி வருகின்றனர்.