ராம் கோபால் வர்மா இந்த பெயரைக் கேட்டாலே கோலிவுட், டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஆட்டம் காணும்.அப்படிப்பட்ட சர்ச்சை வரலாறுகளுக்கு சொந்தக்காரர். சூர்யாவின் ரத்த சரித்திரம், வீரப்பன், லக்‌ஷிமி என்.டி.ஆர். என அடுத்தடுத்து சர்ச்சை படங்களை இயக்கியவர்.சமீபத்தில் தெலுங்கில் வெளியான அம்மா ராஜ்யம் லோ கடப்பா பிட்டலு படம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது.  படங்கள் மட்டுமல்லா, அவரது பேச்சும், டுவிட்டர் பதிவுகளும் கூட சில நேரங்களில் சிக்கலை இழுத்துவரும்.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

சமீபத்தில் கூட சரக்கு வாங்க வரிசையில் நின்ற பெண்களை பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டார். பெண்கள் வரிசையில் நிற்கும் போட்டோவை பதிவிட்ட ராம் கோபால் வர்மா, அதில், யாரு ஒயின் ஷாப் வரிசையில் நிற்கிறார்கள் என்று பாருங்கள்? குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களை காக்க வேண்டும் என்றும் இப்போதும் பேசி வருகிறோம் என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். 

தற்போது உயிர்கொல்லி நோயானா கொரோனாவிற்கு பயந்து பலரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தனது அடல்ட் படமான கிளைமேக்ஸ் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான மியா மல்கோவா நடிப்பில் ரொமான்ஸ், த்ரில்லர், கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த அந்த படத்தின் டீசர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க:  உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

டீசரில் லிப் லாக், அரை நிர்வாண காட்சிகள் என சகட்டு மேனிக்கு கிளுகிளுப்பு பொங்குவதால் அடல்ட் படம் என்பது கன்பார்ம் ஆகிவிட்டது. ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளைமேக்ஸ் படத்தின் டீசர் அதிக ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி படத்தின் டிரெய்லரை வரும் 18ம் தேதி இரவு 9.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.