கொரோனா பிரச்சனையால் நிறுத்தப்பட்டிருந்த சீரியல் ஷூட்டிங்குகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குறைந்த வேலை ஆட்கள், ஏகப்பட்ட பர்மிஷன் கெடுபிடிகள், கொரோனா விதிமுறைகள் என பல சிக்கல்கள் இருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களுக்காக பிரபல தொலைக்காட்சிகள் அனைத்தும் பணியை தொடங்கிவிட்டன.இதனிடையே கடந்த சில நாட்களாகவே சீரியல் நடிகர், நடிகைகள் மாற்றம், திடீரென பாதியில் கைவிடப்படும் சீரியல்கள் என இல்லதரசிகளுக்கு தொடர் துக்க செய்தியாகவே வந்து கொண்டிருக்கிறது. 

 

இதையும் படிங்க:  கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த போதே ஷூட்டிங் பணிகள் அனைத்தையும் நிறுத்த பெப்சி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மார்ச் மாத இறுதியுடன் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதனால் கையிருப்பு இருந்த எபிசோட்களையும் ஒளிபரப்பி முடிந்த தொலைக்காட்சிகள், தற்போது மக்கள் மனம் கவர்ந்த பழைய தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் மீண்டும் ஒளிபரப்பி வந்தன. தற்போது சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

அங்கு தான் ஆரம்பித்தது சிக்கலே ஷூட்டிங் இல்லை என்பதாலும், லாக்டவுனுக்கு பயந்தும் சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு நடையைக் கட்டினர். அப்படி போனவர்கள் உடனடியாக திரும்ப முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தவித்து வந்த நடிகைகள் இருவரை விஜய் டி.வி. தங்களது சீரியலில் இருந்து நீக்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்த ரக்‌ஷா, ரேஷ்மி இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

லாக்டவுன் அறிவித்தவுடன் ரக்‌ஷா தனது சொந்த ஊரான பெங்களூரு திரும்பியுள்ளார். அங்கிருந்து மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக அழைத்த போது அவரால் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் ஷூட்டிங்கிற்கு செல்ல சம்மதிக்கவில்லையும், அதுமட்டுமின்றி மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாம். இதனால் அவரால் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு குழுவோ அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை போட்டு ஷூட்டிங்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.