தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டைக்காரன்.இப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் இன்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டைக்காரன்.இப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் இன்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாபு சிவன் தொடக்கத்தில் இயக்குநர் தரணியிடன் உதவி இயக்குநரகாகப் பணிபுரிந்த நிலையில் வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.இவருக்கு வயது 54. இந்தநிலையில், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.