இந்திய திரைப்படங்களில் பிரபல பாடகராக வலம் வருபவர் மிகா சிங். பாலிவுட் நடிகை ராக்கி சவந்திற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது, இளம் பெண்ணுக்கு ஆபாச மெசெஜ் அனுப்பியது என மிகா சிங் மீது சர்ச்சை புகார்கள் ஏராளம். மும்பை அந்தேரியில் வசித்து வரும் மிகா சிங்கிற்கு அங்கு சொந்தமாக பங்களா ஒன்று உள்ளது. 

இதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...!

அதில் மிகா சிங்கின் ஸ்டுடியோ அமைந்துள்ள நிலையில், அவரது மேனேஜரான சவுமியா கான் என்பவரும் அங்கு வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்த சவுமியாவை அந்த வீட்டில் வேலை பார்ப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுமியா இறந்து பல மணி நேரங்கள் ஆவதாக தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சவுமியா கானின் மரணத்திற்கான பகீர் காரணத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி சவுமியா குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்கனவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் அவர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் அது உறுதியாகியுள்ளது.