இந்திய சினிமாவின் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று இதுவரையில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனைப் புரிந்திருக்கும் பிரபல பின்னணி பாடகரான, மத்திய அரசின் தேசிய விருதை 8 முறை பெற்றிருக்கிறார். இந்திய அரசின் மதிப்புமிக்க விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். 

இதையும் படிங்க: "மடியில கனமில்ல... வழியில பயமில்ல"... ஐ.டி.ரெய்டை அடுத்து விஜய் செய்த காரியம்...!

யேசுதாஸுக்கு கே.ஜே.ஜஸ்டின் என்ற இளைய சகோதரர் உள்ளார். 62 வயதாகும் ஜஸ்டின், கேரளாவில் உள்ள காக்கநாடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ம்  தேதி இரவு முதல் ஜஸ்டினை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில்,  கொச்சியின் வல்லார்படம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் ஐஸ்டின் வயதுள்ள நபரின் சடலம் கிடப்பதாக திரிக்ககர போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அவர்களது குடும்பத்தினர் இறந்தது ஐஸ்டின் தான் என்பதை உறுதி செய்துள்ளனர். 

இதையும் படிங்க: அடேங்கப்பா... 300 கோடி வரி ஏய்ப்பா?... ஐ.டி.ரெய்டில் வெளியான பகீர் தகவல்...!

ஐஸ்டின் சடலம் தற்போது எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜே ஜஸ்டின் உயிரிழந்தற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.