Blue sattai maran: ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும்,'ப்ளூ சட்டை' மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். 

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும்,'ப்ளூ சட்டை' மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேசமயம், படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து தனது பாணியில் அதிரடியாக 'ப்ளூ சட்டை' மாறன் சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும். கிருத்திகா உதயநிதி, இவரது விமர்சனத்திற்கு ஒரு விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைசொல்வது சுலபம், ஆனால் படம் பண்ணுவது கடினம் என்று இவரது விமர்சனத்தை சுட்டிக்காட்டும் விமர்சகர்களுக்கு சவால் விடும் படமாக 'ப்ளூ சட்டை' மாறனின் ஆன்டி இந்தியன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. 

மறுபுறம், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான “DekhTamashaDekh” வின் கதையை காப்பி அடித்துள்ளதாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.

மேலும் படிக்க....Valimai Box Office: 200 கோடியை தாண்டிய அஜித்தின் வலிமை...வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்! குஷியில் ரசிகர்கள்!

இருப்பினும், பாரதிராஜா உள்பட பல மூத்த இயக்குனர்கள் ஆன்டி இந்தியன் படம் பார்த்து 'நீ சாதிச்சுட்டடா... எங்களை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்குடா' என்று புகழ்ந்திருந்தனர். இதை, ஆயுதமாக எடுத்து கொண்ட 'ப்ளூ சட்டை' நடிகர்களை விமர்ச்சிப்பதில் எல்லை மீறி வருகிறார்.

சமீபத்தில், வெளிவந்த வலிமை திரைப்படம் திரையங்குகளில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. அதில், அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் ட்ரோல் செய்து இருந்தார்.

அஜித்தை இப்படி பேசியதற்கு பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வலிமையை விமர்சித்த ப்ளு சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்து விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் நடிகர் ராகவேந்திரன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் , "என்னங்க சொன்னீங்க, அஜித் சார் மூஞ்சில தொப்பை விழுந்திருக்கா? சார் நீங்க என்னை தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க என கண்ணில் பட்டா, உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்லை. ஷார்ட் டெம்பர் என்றால் என்ன என்பதை நீங்கள் பார்ப்பீங்க. நான் தளபதி விஜய் சார் ரசிகன், அஜித் சார் அட்மையர் என்று எச்சரித்து உள்ளார்.

View post on Instagram