ரஜினியின் லிங்கா, மோகன் லாலின் வில்லன், சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் என டாப் ஸ்டார்களின் பல படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் வசித்து வருகிறார். தற்போது ராக்லைன் வெங்கடேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு அவருடைய மகனான டாக்டர் அபிலாஷ் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. 


 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா, நடிகையான இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி.யாக உள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முரட்டு காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 4ம் தேதி சுமலதாவிற்கு லேசான தலைவலி, தொண்டை எரிச்சல் இருந்துள்ளதுள்ளது. இதனால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட சுமலதா கொரோனா பரிசோதன் மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சுமலதா அங்கிருந்த படியே கொரோனா தொற்றிற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

 

இதையும் படிங்க:  “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மறைந்த நடிகர் அம்பரீஷுக்கு நினைவு மண்டபம் கட்டுவது தொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பாவை சுமலதா சந்தித்துள்ளார். அப்போது ராக்லைன் வெங்கடேஷும் அவருடன் சென்றுள்ளார். அதன் பின்னரே சுமலதாவிற்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் ராக்லைன் வெங்கடேஷுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை, எதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது என எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் ராக்லைன் வெங்கடேஷ் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது.