famous news reader death in accident

தற்போதெல்லாம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு, தொகுப்பாளர்களுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபல மலையாள தொலைகாட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் சூர்யா வாசன்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தன்னுடைய உறவினர் வீடிற்கு சென்று விட்டு மீண்டும் இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் நிலை தடுமாறி இவருடிய வண்டியின் மீது மோதியது.

இந்த சம்பத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா வாசன், கண் இம்மைக்கும் நேரத்தில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இவர் கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த கோர விபத்தில் செய்தி தொகுப்பாளர் சூர்யா வாசன் அதே இடத்தில் மரணமடைந்தார். 29 வயதாகும் சூர்யா நீண்ட காலமாக பிரபல மலையாள தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். மேலும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் இவருடைய தந்தை உயிரிந்ததாக கூறப்படுகிறது. 

இவரின் மறைவிற்கு, ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.