இசையுலகை சோகத்தில் மூழ்க வைத்த அதிர்ச்சி... பிரபல இசையமைப்பாளர் உடல் நலக்குறைவால் மரணம்...!
அந்த துக்கத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் இசையுலகில் ஏற்பட்டுள்ள மற்றொரு மிகப்பெரிய இழப்பு திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே திரைத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் துரதிஷ்டவசமானது. கொரோனா நெருக்கடி காலத்தில் திரையுலகினர் அடுத்தடுத்து மரணிப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 25ம் தேதி அன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலன்றி காலமானார். இசையுலகின் மூடிசூடா சக்கரவர்த்தியான எஸ்.பி.பி.யின் மறைவு இசையுலகினரையும், இசைப்பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த துக்கத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் இசையுலகில் ஏற்பட்டுள்ள மற்றொரு மிகப்பெரிய இழப்பு திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!
கன்னட திரையுலகில் ஜாம்பவானாக வலம் வந்தவர் இசையமைப்பாளர் ராஜன். தெலுங்கு மற்றும் மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் எல்லோரும் வாழ வேண்டும், வீட்டுக்கு வீடு வாசப்படி உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை 375 பாடல்களுக்கு இசையமைத்துள்ள ராஜன், உடல் நலக்குறைவால் கடந்த 11ம் தேதி இரவு காலமானார்.
இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!
வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே ராஜன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மூச்சு விட முடியாமல் திணறிய ராஜன், பெங்களூரில் உள்ள வீட்டிலேயே மரணமடைந்தார். 70களில் கன்னட திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் ராஜனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.