Actress Meenakshi Govindarajan : கடந்த 2019ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான "கென்னடி கிளப்" என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் மீனாட்சி கோவிந்தராஜன்.
மதுரையில் பிறந்து அங்கேயே தனது பள்ளி படிப்பையும், பட்டப்படிப்பையும் முடித்து, நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை நாடகங்களில் நடிக்க துவங்கிய நடிகை தான் மீனாட்சி கோவிந்தராஜன். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது கலைப்பயணத்தை இவர் துவங்கினார்
அதன் பிறகு சில சின்னத்திரை ஷோக்களிலும் பங்கேற்ற மீனாட்சி கோவிந்தராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நடிகர் சசிகுமாரின் "கென்னடி கிளப்" என்கின்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அறிமுக இயக்குனர் கவின் இயக்கத்தில் வெளியான "வேலன்" என்கின்ற திரைப்படத்திலும் நடித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயின் நடிப்பில் வெளியான வீரபாண்டியபுரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த மீனாட்சி கோவிந்தராஜன் தற்போது இறுதியாக கடந்த 2022ம் ஆண்டு வெளியான இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான "கோபுரா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்பொழுது அருள்நிதி நடிப்பில் வெளிவர இருக்கின்ற "டிமான்டி காலனி" படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் Lovendra Cassandra என்ற தலைப்பில் இவர் ஒரு நடிகரோடு சில வீடியோக்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறார். இது அவருடைய அடுத்த வெப் சீரிஸ்க்கான ஒரு ப்ரோமோஷன் என்று கூறப்படுகிறது.
ஆனால் காதல் வலையில் சிக்கி அவர் தனது காதலனோடு வீடியோ போட்டுள்ளாரா? அல்லது உண்மையில் இது அவருடைய அடுத்த பட அறிவிப்பு தானா என்ற குழப்பத்தில் உள்ளனர் அவருடைய ரசிகர்கள். விரைவில் இந்த Lovendra Cassandra என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று குறிப்பிடத்தக்கது.
