திரையுலகில் அடுத்தடுத்து பல்வேறு பிரபலங்களின் மரணங்கள் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் பலராலும், மறந்து விட முடியாது. காரணம் பல திறமையான கலைஞர்களை இழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அணைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இழந்துள்ளனர். 

சமீபத்தில் 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார். தனது குரலால் இசையுலகை ஆண்ட எஸ்.பி.பியின் மரணத்தை மறக்க முடியாமல் அவருடைய பண்ணை வீட்டில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் முன்னணி இயக்குநர் ஒருவர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க:  டிக்-டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் விஜய் ரெட்டி, வயது 84. இவர் கன்னடத்தில் இதுவரை 50 படங்களை இயக்கியுள்ளார். ராஜ்குமாரின் 150 வது படமான, கந்தடா குடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார். கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோக்களின் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள இவர், அங்கு மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருத்தப்பட்டவர். 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

சென்னையில் வசித்து வந்த விஜய் ரெட்டிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு இருந்ததாக கூறப்படுகிறது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜய் ரெட்டி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.  விஜய் ரெட்டியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.