கொரோனா பிரச்சனை ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மன அழுத்தம் காரணமாக பிரபலங்கள், உயிரிழந்து வரும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல போஜ்புரி நடிகை அனுபமா, இவர் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் மும்பையில் தான் வசித்து வந்த  வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  40 வயது நடிகையான அனுபமா ஏமாற்றத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் அவரது வீட்டில் தற்கொலை கடிதம் ஒன்றும்  கைப்பற்ற பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில், தான் நடித்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை, நண்பர் ஒருவர் தொழிலுக்கு கேட்டதால் கொடுத்தேன் அதை திரும்பி கேட்டபோது தரவில்லை. மேலும் இவர் வைத்திருந்த பைக் ஒன்றையும் நண்பருக்கு கொடுத்து ஏமார்ந்துள்ளார். இப்படி தொடர்ந்து ஏமாற்றத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார் அனுபமா.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அனுபமா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதில் யாரையும் நம்ப வேண்டாம் என்றும், நண்பர் என யார் பழகினாலும் அவர்களை நம்பி விடாதீர்கள் என உணர்ச்சி வசம் மிகுந்த வார்த்தைகளால் பேசியுள்ளார். சுமார் 10 நிமிடங்கள் இந்த வீடியோவில் பேசியுள்ளார். நண்பருக்கு உதவி செய்ய போய் அவரே இவருக்கு எமனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய தற்கொலை சம்மந்தமாக, அனுபமாவின் நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.