Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகையின் மகன்கள்... மனித உரிமை ஆணையத்தில் அதிரடி புகார்...!

இதையடுத்து பள்ளி நிர்வாகம் திடீரென மதுமிதாவின் 2 மகன்களையும் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளது

Famous Actress son removed from online class taken to human rights commission
Author
Chennai, First Published Sep 23, 2020, 7:33 PM IST

பார்த்திபன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான குடைக்குள் மழை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பின்னர் இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மதுமிதா, தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா என இரு மகன்கள் உள்ளனர். 

Famous Actress son removed from online class taken to human rights commission

 

இதையும் படிங்க: அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடன் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் பள்ளிக் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை ஆன்லைன் கிளாஸில் இருந்து வெளியேற்றக்கூடாது, வருகைப்பதிவு கூடாது என தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஒரு சில கட்டுப்பாடுகள் மாநிலந்தோறும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Famous Actress son removed from online class taken to human rights commission

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...!

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் மதுமிதாவின் மகன்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டணத்தை குறைக்கும் படி மதுமிதாவும், சில பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்துள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் திடீரென மதுமிதாவின் 2 மகன்களையும் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளது. இதுபற்றி பள்ளி தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை. இதனால் கொதித்துப்போன மதுமிதா இந்த பிரச்சனையை மனித உரிமைகள் ஆணையம் வரை கொண்டு சென்றுள்ளாராம். 

Follow Us:
Download App:
  • android
  • ios